Map Graph

கிருஷ்ணன்கோவில் (நாகர்கோவில்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர்

கிருஷ்ணன்கோவில் (Krishnancoil) என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும். இவ்வூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலின் பெயராலேயே இவ்வூர் வழங்கப்படுகிறது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது தேசிய நெடுஞ்சாலை 47 இல் அமைந்துள்ளது. இது நாகர்கோவில் நகரை கேரளா தலைநகரான திருவனந்தபுரத்துடன் இணைக்கிறது. கிருஷ்ணன் கோவில் ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவில் "தென் திசையின் குருவாயூர்" என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் உள்ள கிருஷ்ணன் சிலை, குருவாயூர் கோவிலில் உள்ள ஒரு முக்கிய தெய்வத்தை ஒத்திருக்கிறது. கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள கிருஷணன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

Read article